கால்நடை மருத்துவப் படிப்பில் 26 பதக்கங்கள் பெற்று சாதனை

கால்நடை மருத்துவப் படிப்பில் 26 பதக்கங்கள் பெற்று சாதனை

1 mins read
1f011ad8-5e2c-44be-b830-3f4018700f52
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த சங்கர் என்ற மாணவருக்கு 26 பதக்கங்கள், இரு பண விருதுகளை ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார்.படம்: ஊடகம் -

சென்­னை: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் பிவிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சங்கர் என்ற மாணவர் 26 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற தமிழ்­நாடு கால்­நடை மருத்­துவ அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­ட­ம­ளிப்பு விழா­வில், கால்­நடை மருத்­து­வம் இளங்­க­லைப் படிப்­பிற்கான பெரும்­பாலா­ன பாடங் களில் திருப்பூரைச் சேர்ந்த மாண வர் சங்கரே முத­லி­டம் பெற்றிருந்­தார். அத­னால், 26 பதக்­கங்­க­ளை அவர் அடுத்தடுத்து பெற்று பார்வையாளர்களை வியப்புக் குள்ளாக்கினார்.

"எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காததால் கால்நடை மருத் துவப் படிப்பைத் தேர்வு செய்து படித்தேன். பாடத்தில் முழு கவன மும் இருந்ததால் 26 பதக்­கங்­களை வென்றுள்ளேன். தற்­போது கேர­ளா­வில் உள்ள கால்­நடை மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் முது­கலை படிப்பை பயின்று வரு­கி­றேன்," என்றார் சங்கர். இவரது தந்தை ராமசாமியும் தாயார் புஷ்பராணியும் திருப்பூர் பனியன் நிறுவனப் பணியாளர்களாவர்.