சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தப் புதிய முனையத்தில் ஜூன் மாதம் முதல் முழு அளவில் பன்னாட்டு சேவைப் பிரிவுகள் செயல்பட உள்ளதாக தகவல்கள் ெதரிவித்துள்ளன.
அனைத்துலகத் தரத்தில் முற்றிலும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக இந்த முனையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
முனையத்தின் உள்பகுதியில் கலை, கலாசாரம், ெமாழி, பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஓவியங்களும் சுற்றுலா இடங்கள் குறித்த காட்சிப் படங்களும் இடம்பெற்று உள்ளதாடு, அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளும் கண்ைணக் கவரும் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முனையத்தின் கீழ்ப்பகுதியை அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து விளக்குகள் அனைத்தையும் இயக்கி சோதிக் கப்பட்டது.
அடுத்த இரண்டு மாதங்களில் விமானச் சேவை நிறுவனங்கள், பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவை ஒருங்கிைணைந்த புதிய பன்னாட்டு முனையத்துக்கு மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

