சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரு நாள்களில் கஞ்சா விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய சோதனையில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒழிக்கும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதிவரை தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்தச் சோதனை நடவடிக்கைகள் ஆங்காங்கே முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து 150 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 50 பேரும் கோவையில் 32 பேரும் ஈரோட்டில் 10 பேரும் கைதாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மாத கஞ்சா வேட்டையில், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேேபால் இவ்வாண்டு தொடங்கியுள்ள கஞ்சா வேட்டைக்கு 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.

