சென்னை: மாநில அரசு பரிந் துரைத்துள்ள நான்கு இடங்களில் பன்னூர் அல்லது பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதாகவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா கூறியுள்ளார்.
போபால்-சென்னைக்கு இடையே யான நேரடி விமானச் சேவையை தொடங்கிவைத்து விழாவில் பேசிய அமைச்சர், "சென்னையில் இரண்டா வது விமான நிலையத்தை அமைப் பதற்காக மாநில அரசால் பரிந்து ரைக்கப்பட்ட நான்கு இடங்களில் இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
"இவற்றில் ஓரிடத்தை இறுதி செய்வதற்காக மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இடம் இறுதியான பிறகு, இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணியைத் துரிதமாகத் தொடங்கி, முடிக்கப்படும்," என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

