விபத்தில் நால்வர் பலி

விபத்தில் நால்வர் பலி

1 mins read
9845d3d5-7755-458f-bf68-d56af7ca4f00
-

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் தொழிலாளர்கள் மூவரும் வேன் ஓட்டுநரும் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் காயமடைந்தனர்.

தொழிற்சாலைப் பணிக்கு 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.