செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
cbbf7421-4bc8-40e3-9943-50b0e0d28516
-

5 அடி உயர ஐம்பொன் சிலை மீட்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள டி.மாங்குடி என்ற கிராமத்தில் சதீஷ்குமார், 37, என்பவர், சிலைகளைச் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இந்தப் பட்டறையில் இருந்து 5 அடி உயரம், 4 அடி அகலமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலையை காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த சிலைக்குரிய ஆவணங்கள் எதுவும் சதீஷ்குமாரிடம் இல்லாததால் விசாரணை நடக்கிறது.

இளையருக்கு விேநாத தண்டனை

சென்னை: விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் உயிரின் மதிப்பையும் உணர்த்துவதற்காக பைக்ரேசில் ஈடுபட்டு கைதான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் வித்தியாசமான ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவ மனையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் 'வார்டுபாய்'க்கு உதவியாக ஒருமாத காலத்துக்கு பிரவீன் பணியாற்ற நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

'கிராமங்கள் தேடி மருத்துவ' திட்டம்

சென்னை: கிராமங்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை அடுத்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டத்தின்கீழ், 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் 70 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் எனவும் ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், தாதி, மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பர் எனவும் கூறியுள்ளார்.