திருப்பத்துார்: திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த மோசமான வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் மாண்டனர்.
மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜவ்வாது மலையில் புங்கனுார் நாடு மலைக் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் கோயில் திருவிழாவிற்காக நேற்று காலை 9:30 மணிக்கு அருகில் உள்ள நெல்லிவாசன் நாடு என்ற கிராமத்திற்கு மினி வேனில் சென்றுள்ளனர்.
காலை 11:30 மணிக்கு புதுார்நாடு என்ற இடத்தில் சென்றபோது மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் உடனடி யாக ஈடுபட்டனர்.
மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் உடல்கள் சிதறிக் கிடந்தன. சிலர் காயத்தால் துடிதுடித்துக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் கதறி அழுவதை காணொளியில் காண முடிந்தது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

