சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்: அரசு உறுதி

2 mins read
169a9cb2-e440-4f5e-ae8b-3ea5c9c507c1
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் சுமார் 700 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் பர­வி­யுள்ள சீமைக்­க­ரு­வேல மரங்­களை அகற்­றும் முன்­னோடி திட்­டத்­துக்­காக ரூ.5.35 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக ஆனை­மலை, முது­மலை, சத்­தி­ய­மங்­க­லம் புலி­கள் சர­ணா­ல­யப் பகு­தி­க­ளி­லும் தர்­ம­புரி மாவட்ட பகு­தி­க­ளி­லும் 200 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் உள்ள அந்­நிய மரங்­கள் அகற்­றப்­படும் என்று உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள அறிக்­கை­யில் அரசு குறிப்­பிட்­டுள்­ளது.

சீமைக்­க­ரு­வேல மரங்­களை பத்து ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக முழு­மை­யாக அகற்ற இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அரசு அறிக்கை தெரி­விக்­கிறது.

தமி­ழ­கத்­தில் உள்ள சீமைக்­க­ரு­வேல மரங்­க­ளால் மாநி­லத்­தின் சுற்­றுச்­சூ­ழல் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ கூறி­யுள்­ளார். எனவே அம்­ம­ரங்­களை அடை­யா­ளம் கண்டு உட­ன­டி­யாக அகற்ற அர­சுக்கு உத்­த­ர­வி­டக்­கோரி வைகோ உள்­ளிட்ட பலர் உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­துள்­ள­னர்.

இந்த வழக்குகளை விசா­ரித்த நீதி­மன்­றம் மாநி­லம் முழு­வ­தும் உள்ள சீமைக்­க­ரு­வேல மரங்­களை உட­ன­டி­யாக அகற்ற அர­சுக்கு உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து மரங்களை அகற்­று­வது தொடர்­பான கொள்­கையை வகுக்க அவ­கா­சம் வழங்க வேண்­டும் என்று அர­சுத்­த­ரப்பு கேட்­டுக் கொண்­டது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் இந்த மனு மீதான விசா­ரணை நடந்­த­போது சீமைக்­க­ரு­வேல மரங்­களை அகற்­று­வது தொடர்­பான வரைவு கொள்கை அரசு இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் இது தொடர்­பாக பொது­மக்­க­ளி­டம் கருத்­து­கள் கேட்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அரசு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

"சீமைக்­க­ரு­வேல மரங்­களை வெட்­டுப் பணி நடை­பெற்று வரு­கிறது. வெட்­டப்­பட்ட மரங்­கள் அடுத்த 5 ஆண்­டு­களில் மீண்­டும் வள­ரா­மல் கண்­கா­ணிக்க திட்­டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் 196 வகை­யான அந்­நிய மரங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. இதில் சீமைக்­க­ரு­வே­லம் உள்­ளிட்ட 23 வகை­யான மரங்­கள் உட­ன­டி­யாக அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யவை என முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்­றும் அர­சு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து இந்த வழக்கு விசா­ர­ணையை ஜூன் முதல் வாரத்­துக்கு ஒத்தி வைப்­ப­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.