தமிழகத்தில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பு

1 mins read
0da406c8-e561-4e4f-8591-9b605cf749de
-

சென்னை: கொரோனா பேரி­ட­ருக்குப் பின்­னர் தமி­ழகத்­தில் சிறு­நீ­ர­கம், கல்­லீ­ரல் செயல் இழப்­பால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் சென்னை அர­சுப் பொது மருத்­து­வ­ம­னை­யில் உட­லு­றுப்பு தானம் குறித்த விழிப்­பு­ணர்­வுப் பயிற்­சிப் பட்­ட­றையை தொடங்கி வைத்­துப் பேசிய அவர், தமி­ழ­கம் மட்­டு­மின்றி உல­கம் முழு­தும் இந்­நிலை காணப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உலக அள­வில் பார்க்­கும்­போது சிறு­நீ­ரக, கல்­லீ­ரல் செய­லி­ழப்பு போன்ற பாதிப்­பு­கள் அதி­க­ரிப்­பது கவலை அளிக்­கிறது. மூளைச்­சாவு ஏற்­பட்டவர்­க­ளி­டம் இருந்து உறுப்­பு­களைத் தான­மா­கப் பெற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பொருத்­தப்­ப­டு­கின்­றன. இந்த உன்­ன­த­மான சிகிச்சை முறையை வேகப்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

தமி­ழ­கத்­தில் கடந்த 2008ஆம் ஆண்டு ஹிதேந்­தி­ரன் என்ற 15 வயது மாண­வர் விபத்­தில் மரணம் அடைந்­த­போது, அவ­ரது உறுப்­பு­கள் தான­மாக பெறப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதன் மூலம் பல உயிர்­கள் காப்­பாற்­றப்­பட்­டதை நினை­வு­கூர்ந்­தார்.