வெளிநாடுவாழ் இந்தியரிடம் ரூ.12.50 கோடி சுருட்டிய தம்பதியர் அதிரடிக் கைது

வெளிநாடுவாழ் இந்தியரிடம் ரூ.12.50 கோடி சுருட்டிய தம்பதியர் அதிரடிக் கைது

2 mins read
318d1261-7048-4530-9f07-ece1f34e261e
-

சென்னை: வெளி­நா­டு­வாழ் இந்தி­ய­ரி­டம் ரூ.12.50 கோடி பெற்­றுக்­கொண்டு மோசடி செய்த காங்­கி­ரஸ் கட்­சிப் பிர­மு­க­ரும் அவ­ரது மனை­வி­யும் அதி­ர­டி­யா­கக் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து சென்­னை­யைச் சேர்ந்த 34 வய­தான சுனிதா (படம்), அவ­ரது கண­வர் ரஞ்­சித் மீது மோசடி வழக்கு பதி­வாகி உள்­ளது. ரஞ்­சித் காங்­கி­ரஸ் கட்­சிப் பிர­மு­கர் ஆவார்.

சென்­னை­யைச் சேர்ந்த 68 வய­தான சீனி­வா­சன் என்­ப­வர் சவூதி அரே­பி­யா­வில் ஏற்­று­மதி நிறு­வ­னம் நடத்தி வரு­கி­றார். கொரோனா நெருக்­கடி வேளை­யில், இந்­தி­யா­வுக்கு வந்த அவ­ரால் பின்­னர் சவு­திக்கு திரும்ப முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், சீனி­வா­ச­னி­டம் கோடிக்­க­ணக்­கில் பணம் இருப்­பதை அறிந்த ரஞ்­சித், சுனிதா தம்­ப­தி­யர் அவரை ஏமாற்­றிப் பணம் பறிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து சீனி­வா­சனை எப்­ப­டியோ தொடர்புகொண்டு பேசி, நேரில் சந்­தித்­த­னர். அப்­போது பல்­வேறு நிதி நிறு­வ­னங்­களை நடத்தி வரு­வ­தா­க­வும் அவற்­றில் முத­லீடு செய்­தால் இரட்­டிப்பு லாபம் கிடைக்­கும் என்­றும் இரு­வ­ரும் கூறிய ஆசை வார்த்­தை­களை நம்­பி­யுள்­ளார் சீனி­வா­சன்.

சென்­னை­யில் அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தங்­க­ளது தலைமை அலு­வ­ல­கம் போல் மாற்­றி­ய­மைத்து இரு­வ­ரும் ஆடிய நாட­கத்தை முழு­மை­யாக நம்­பிய சீனி­வா­சன், கோடிக்­க­ணக்­கில் பணம் கொடுத்­துள்­ளார்.

அவரை தங்­கள் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ராக சேர்த்­துக் கொள்­ளும் வாக்­கு­று­தி­யும் ரஞ்­சித் தம்­ப­தி­ய­ரால் அளிக்­கப்­பட்­டது. மேலும், அவ­ச­ரத் தேவை என்று கூறி சீனி­வா­ச­னி­டம் இருந்து 32 பவுன் நகை­க­ளை­யும் பெற்­றுள்­ள­னர்.

இதற்­கி­டையே, சுனி­தா­வை­விட மூன்று வயது குறைந்­த­வ­ரான ரஞ்­சித்­துக்­கும் வேறொரு பெண்­ணுக்­கும் கள்ள உறவு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது­கு­றித்து தன் மனை­விக்கு தக­வல் கொடுத்­த­தாக எழுந்த சந்­தே­கத்­தின் பேரில் தனது கார் ஓட்­டு­நரை தனி அறை­யில் அடைத்து வைத்து ரஞ்­சித் சித்­ர­வதை செய்­துள்­ளார்.

"இதில் அந்த ஓட்­டு­ந­ரின் கால் எலும்பு முறிந்­தது. அவர் ரஞ்­சித்­தி­டம் இருந்து எப்­ப­டியோ தப்­பித்து வந்து புகார் அளித்­தார். அதன் பேரில் அந்­த­மா­னில் வைத்து ரஞ்­சித் கைது செய்­யப்­பட்­டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பண மோசடி குறித்து சுனிதா மிக­ வி­ரி­வான வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.