தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்: வடமாநிலத்தவர் தாக்கி காவலர்கள் எழுவர் காயம்; 40 பேர் கைது

தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்: வடமாநிலத்தவர் தாக்கி காவலர்கள் எழுவர் காயம்; 40 பேர் கைது

2 mins read
6d5ebcbb-c663-42f7-828d-16a65502d38b
-

ஈரோடு: பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு­வர் விபத்­தில் சிக்கி இறந்­து­போ­னதை அடுத்து, ஆத்­தி­ர­ம் அடைந்த வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தமி­ழ­கக் காவல்­து­றை­யி­ன­ரைத் தாக்கி காயப்­ப­டுத்­திய சம்­பவம் பெரும் அதிர்ச்சியையும் பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மொடக்­குறிச்சி அருகே நஞ்சை ஊத்­துக்­கு­ளி­யில் தனி­யார் எண்­ணெய் ஆலை ஒன்று செயல்­பட்டு வரு­கிறது. பீகா­ரைச் சேர்ந்த கமோத்­ராம் எனும் ஆட­வர் நேற்று முன்­தி­னம் அங்கு இர­வுப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

அப்­போது, பொருள்­களை ஏற்­றிச் செல்­வ­தற்­காக அங்கு சரக்கு லாரி ஒன்று வந்­தது. கமோத்­ராம் பின்­னால் இருந்­த­தைக் கவ­னிக்­கா­மல் ஓட்­டு­நர் லாரி­யைப் பின்­பு­ற­மாக இயக்­கி­னார். இத­னால், லாரி கமோத்­ராம்மீது மோத, பின்­சக்­க­ரத்­தில் சிக்கி அவர் இறந்­து­போனார்.

இத­னை­ய­டுத்து, நூற்­றுக்­க­ணக்­கில் அங்கு திரண்ட வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் சட­லத்தை எடுக்­க­வி­டா­மல் போராட்­டம் நடத்­தி­னர். 12 லட்ச ரூபாய் காப்­பு­று­தித் தொகை பெற்­றுத் தரு­வ­தாக ஆலை நிர்­வா­கத்­தி­னர் உறு­தி­ய­ளித்­த­னர். ஆனா­லும், அதை ஏற்­காத வட­மாநி­லத்­ தொழிலாளர்கள், 12 லட்ச ரூபாய் பணத்தை அல்­லது காசோ­லையை உடனே தர வேண்­டும் என்று வலியுறுத்­தி­னர்.

தக­வ­ல­றிந்து விரைந்து வந்த மொடக்­கு­றிச்சி காவல் ஆய்­வா­ளர் தீபா தலை­மை­யில் காவல்­து­றை­யினர் பேச்­சு­வார்த்தை­யில் ஈடு­பட்­டனர்.

ஆனா­லும், பேச்­சு­வார்த்­தைக்கு இணங்­காத தொழி­லா­ளர்­கள் உருட்­டுக்­கட்­டை­யா­லும் கற்­களை வீசி­யும் தாக்­கு­த­லில் இறங்­கி­னர். இத­னால், அவர்­க­ளுக்­கும் காவ­லர்­க­ளுக்­கும் இடையே மோதல் வெடித்­தது. முன்­பு­ற­மி­ருந்த பாது­காப்பு அறை­யும் மூன்று காவல்­துறை வாக­னங்­களும் அடித்து நொறுக்­கப்­பட்­டன. ஆய்­வா­ளர் தீபா உள்­ளிட்ட காவ­லர்­கள் எழு­வர் காய­முற்­ற­னர்.

பின்­னர் அதி­க­மான காவ­லர்­கள் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு, நிலைமை கட்­டுக்குள் கொண்டு வரப்பட்டது. வட­மா­நி­லத்­த­வர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.