வாங்குவதுபோல் நடித்து வண்டியை ஓட்டிச்சென்ற காதலர்கள் சிக்கினர்

சேலம்: வாங்க வந்­த­வர்­கள்­போல் நடித்து, 'புல்­லட்'டை ஓட்­டிச் சென்ற காத­லர்­கள், 75 நாள்­க­ளுக்­குப்­பின் பிடி­பட்­ட­னர்.

கர்­நா­டக மாநி­லம், கோலார் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் பிர­வீன், 25. சேலம் பொன்­னாம்­மா­பேட்­டை­யைச் சேர்ந்­த­வர் பிரீத்தி, 22. இரு­வரும் சேலத்­தில் ஒரு ஹோட்­ட­லில் வேலை­செய்து வந்­த­போது இவர்­களுக்­குள் காதல் மலர்ந்­தது.

இவ்­வி­ரு­வ­ரும் கடந்த ஜன­வரி மாதம் 21ஆம் தேதி சேலம், தாது­பாய்­குட்­டை­யில் ஒரு மோட்­டார்­சைக்­கிள் விற்­பனை நிலை­யத்­திற்குச் சென்­ற­னர்.

அங்கு ரூ.1,60,000 மதிப்­புள்ள 'புல்­லட்'டை வாங்க விரும்­பு­வ­தா­க­வும் அதற்­கு­முன் அதனை ஓட்­டிப் பார்க்க விரும்­பு­வ­தா­க­வும் இவர்­கள் கூறி­னர். இவர்­க­ளது வார்த்­தையை நம்பி, கடைக்­கா­ர­ரும் சாவி­யைத் தர, காதல் இணை வண்­டி­யோடு பறந்­தது. போன­வர்­கள் திரும்பி வரா­த­தால் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டது. அதன்­பின் கர்­நா­ட­க மாநிலத்தில் பதுங்­கி­யி­ருந்த இருவரும் 75 நாள்­க­ளுக்­குப்­பின் நேற்று முன்தினம் பிடி­பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!