'மதுரை- கோலாலம்பூர் விமானச் சேவை தொடங்குக'

'மதுரை- கோலாலம்பூர் விமானச் சேவை தொடங்குக'

1 mins read
05fc2a1d-feab-4e59-b73c-89c70072b429
-
Google News Preferred Icon

மதுரை: தமிழ்நாட்டின் மதுரை நகருக்கும் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கும் இடையில் விமானச் சேவையைத் தொடங்கும்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு வர்த்தக தொழில் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சிக்கும் கோலாலம்பூர் நகருக்கும் இடையில் அண்மையில் அனைத்துலக சேவையைத் தொடங்கியதை அது சுட்டியது. தமிழ்நாட்டின் மையத்தில் மதுரை அமைந்து இருக்கிறது.

சாலை, ஆகாயம், ரயில் கட்டமைப்புகள் மூலம் முக்கியமான நகர்களுடன் மதுரை நல்ல போக்குவரத்து தொடர்புகளைக் கொண்டு உள்ளது என்பதையும் சபை குறிப்பிட்டுள்ளது.