ஸ்டாலின்: ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யாதீர்

"இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டும்"

திரு­வ­னந்­தபுரம்: இந்­தி­யாவைக் காப்­பற்ற வேண்­டும் எனில் முதலில் மாநி­லங்­கள் காப்­பாற்­றப்­பட வேண்­டும் என தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லங்­களைப் பழி­வாங்­கு­வதாக நினைத்து மத்­திய அரசு மக்­களைப் பழி­வாங்­கு­கிறது என்று அவர் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் 23வது தேசிய மாநாடு கேரள மாநி­லம் கண்­ணூ­ரில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

அதில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்­திய அரசு ஆளு­நர்­களை வைத்து மாநி­லங்­களை ஆட்சி செய்ய நினைப்­பது முறை­யல்ல என்­றும் ஆளு­நர்­கள் ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக செயல்­ப­டு­வ­தா­க­வும் சாடி­னார்.

"ஒரே நாடு, ஒரே தேர்­தல், ஒரே மொழி என மாற்ற அவர்­கள் முயற்சி செய்கி­றார்­கள். ஆனால் மாநி­லங்­கள் அதிக அதி­கா­ரங்­கள் கொண்­ட­தாக உரு­வெ­டுக்க இந்திய அர­சி­யல் அமைப்பை மாற்ற வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

வேற்­று­மை­யில் ஒற்­றுமை கொண்ட இந்­தி­யா­வில் ஒற்றை தன்­மையை உரு­வாக்க முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் குறிப்பிட்ட அவர், ஆங்­கி­லே­யர் ஆட்­சி­யில் கூட ஒற்றை தன்மை அதி­கா­ரங்­கள் இல்லை என்­றார்.

"தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யியல் நீட் விலக்கு மசோதோ இரு­முறை நிறை­வேற்­றப்­பட்ட நிலை­யில், ஆளு­நர் இன்­று­வரை அதை அதி­ப­ருக்கு அனுப்­ப­வில்லை என்­றார்.

"மாநில வளர்ச்­சிக்­கான திட்­டக்­குழு, தேசிய வளர்ச்­சிக் குழுக்­களை மத்­திய அரசு கலைத்துவிட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் எவ்­வித விவா­தங்­களும் இன்றி சட்­டங்­களை இயற்­று­கிறது பாஜக.

"வேற்­று­மை­யில் ஒற்­றுமை கொண்ட இந்­தி­யா­வில் ஒற்றை தன்­மையை உரு­வாக்க முயற்சி. ஆங்­கி­லே­யர்­கள் செய்ய நினைக்காததைக்கூட பாஜக செய்ய முயல்­கிறது," என்று முதல்­வர் ஸ்டாலின் மேலும் கூறி­னார்.

தனது உரை­யில், மத்­திய அரசை கடு­மை­யாகச் சாடிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தமது உரை­யின்­போது ஓரிரு நிமி­டங்­கள் மலை­யா­ளத்­தில் பேசி­னார். இதற்குப் பலத்த கைதட்­டல் கிடைத்தது.

மேலும், மாநில உரி­மை­களைக் காப்­ப­தில் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் சிங்­கம் போல் செயல்படு­வ­தா­க­வும் தமக்கு வழி­காட்­டும் முதல்­வ­ராக பின­ராயி விஜ­யன் திகழ்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!