அமெரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த சிவன் சிலை பறிமுதல்

அமெரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த சிவன் சிலை பறிமுதல்

1 mins read
40f1f168-ea2e-4ea9-8539-726dd2971255
-

சென்னை: அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற நான்கு கிலோ எடையுள்ள பழமையான சிவலிங்க சிலை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான நிலைய சரக்ககப் பிரிவில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் சரக்கு பொருள்களுக்கு மத்தியில் சிவலிங்க சிலையும் இருந்தது.

அது கடத்தப்பட இருப்ப தாகக் கிடைத்த தகவலை அடுத்து, சுங்க அதிகாரிகள் விரைந்து சென்று அதைக் கைப்பற்றினர். சுமார் 4.5 கிலோ எடை கொண்ட, பித்தளையால் செய்யப்பட்ட அந்தச் சிலை 18ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்தது. சிலையை வெளிநாடு அனுப்பத் தேவையான தொல்லியல் துறை தடையில்லா சான்று எதுவும் வாங்கவில்லை என்பதும் தெரியவந்தது.