ஜல்லிக்கட்டின்போது கல்வீச்சு: காவல்துறை தடியடி

ஜல்லிக்கட்டின்போது கல்வீச்சு: காவல்துறை தடியடி

1 mins read
c48526e2-7bb4-461a-b339-a5b2eba6289f
தடியடி நடத்திய காவல்துறை. படம்: தமிழக ஊடகம் -

மதுரை: திரு­மங்­க­லம் அருகே நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஜல்­லிக்­கட்­டில் மாடு­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே ஏற்­பட்ட வாக்­கு­வா­தம் கார­ண­மாக பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

போட்டி தொடங்­கி­ய­போது, காளை உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட அனு­ம­திச்­சீட்­டு­கள் சரி­பார்க்­கப்­பட்­டன. அப்­போது சில­ரி­டம் போலி அனு­ம­திச்­சீட்டு இருப்­பது தெரிய வந்­தது.

இத­னால் அந்த காளை­களை அனு­ம­திக்க இய­லாது என்று நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர்.

அப்­போது சில காளை ­களை அவற்­றின் உரி­மை­யா­ளர்­கள் அனு­மதி இன்றி பின்புறம் வழி­யாக அவற்றை அவிழ்த்­து­விட்­ட­னர். அவை

பார்­வை­யா­ளர்­கள் கூட்­டத்­தில் புகுந்­த­தால் அவர்­கள் நாலா­பு­ற­மும் சிதறி ஓடி­னர்.

அப்­போது சிலர் பரிசு மேடையை நோக்கி கற்­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர். இத­னால் கூட்­டத்­தைக் கலைக்க போலி­சார் தடி­யடி நடத்த வேண்­டி­யி­ருந்­தது.

இத­னால் ஜல்­லிக்­கட்டு பாதி­யில் நிறுத்­தப்­பட்­டது.