இளநிலைப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு

இளநிலைப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு

2 mins read
50256fc8-ca8e-4943-a411-54562c890dac
-

பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம்

சென்னை: தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்­சிக் குழு­வின் பாடத்­திட்­டத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட எந்­த­வொரு நுழை­வுத் தேர்­வும் நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு மாநி­லப் பாடத்­திட்­டங்­களில் படித்த மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் சம­மான வாய்ப்­பினை வழங்­கி­டாது என்று தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய பல்­க­லைக்­க­ழங்­களில் இள­நி­லைப் படிப்­புக்கு நடத்த திட்­ட­மிட்­டுள்ள நுழை­வுத் தேர்வை கைவி­டக்­கோரி தமி­ழக சட்­டப்­பேர­வை­யில் நேற்று நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை அவர் முன்­மொ­ழிந்­தார். அப்­போது பேசிய அவர், இவ்­வாறு தேர்வு நடத்­து­வது மாண­வர்­களை கடு­மை­யாக பாதிக்­கும் என்று தமி­ழக அரசு கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மத்­திய அர­சின் கீழ் இயங்­கும் பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு 2022-2023ஆம் கல்­வி­யாண்டு முதல், மானி­யக் குழு­வின் நிதி உத­வி­யு­டன் இயங்­கும் அனைத்து மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளி­லும் இளங்­கலை உள்­ளிட்ட பல்­வேறு படிப்­பு­க­ளுக்­கான சேர்க்­கை­கள் தேசிய தேர்வு முகமை (என்­டிஏ) நடத்­தும் பொது பல்­க­லைக்­க­ழக நுழை­வுத் தேர்வு (சியூ­இடி) மூலம் மட்­டுமே நடை­பெ­றும் என்று அறி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து 12ஆம் வகுப்­புக்­கான பொதுத்­தேர்­வில் மாண­வர்­கள் பெறும் மதிப்­பெண்­களை கணக்­கில் கொள்­ளா­மல், பொது பல்­க­லைக்­க­ழக நுழை­வுத் தேர்­வில் மாண­வர்­கள் பெறும் மதிப்­பெண்­கள் அடிப்­ப­டை­யில் மட்­டுமே சேர்க்கை நடை­பெ­றும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மாநி­லப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், தனி­யார், நிகர்­நி­லைப் பல்­க­லைக் ­கழகங்­கள் விரும்­பி­னால் மாண­வர்­கள் சேர்க்­கையை நடத்திக் கொள்­ள­லாம் என்­றும் பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு தெரி­வித்­துள்­ளது.

பெரும்­பா­லான மாநி­லங்­களில், 80 விழுக்­காட்டு மாண­வர்­க­ளுக்­கும் மேலா­ன­வர்­கள் மாநி­லப் பாடத்­திட்­டங்­களில் பயின்று வரு­ப­வர்­கள்­தான் என்­றும் இவர்­கள் பெரும்­பா­லும் விளிம்­பு­நி­லைப் பிரி­வி­ன­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் சுட்­டிக்­காட்­டி­னார்.

"என்­சி­இ­ஆர்டி. பாடத்­திட்ட அடிப்­ப­டை­யி­லான நுழை­வுத் தேர்வு மத்­தி­யப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேரு­வ­தற்­குத் தகு­தி­யான பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு பாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தோடு, இந்­தச் சூழ்­நிலை நம் நாட்­டில் உள்ள பல்­வேறு மத்­திய பல்­கலைக்­க­ழ­கங்­கள், அவற்­றின் இணைப்­புக் கல்­லூ­ரி­களில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் சேர்க்கை எண்­ணிக்­கையை வெகு­வா­கக் குறைக்­கும்.

"இந்த நுழை­வுத் தேர்­வும், நீட் தேர்­வைப் போன்றே நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு பள்­ளிக்­கல்வி முறை­களை ஓரங்­கட்டி, பள்­ளி­களில் நீண்ட காலக் கற்­றல் முறை­களை வெகு­வா­கக் குறைத்து மதிப்­பிட வழி­வ­குப்­ப­தோடு, மாண­வர்­கள் தங்­க­ளது நுழை­வுத் தேர்வு மதிப்­பெண்­களை அதி­க­ரிக்க பயிற்சி மையங்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் ஒரு சூழலை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­தில் ஐய­மில்லை," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

மாண­வர்­க­ளுக்­கான பயிற்சி மையங்­கள் புற்­றீ­சல் போன்று வளர மட்­டுமே இது சாத­க­மாக அமை­யும் என்று தமி­ழக மக்­க­ளி­டையே அச்­சம் எழுந்­துள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இவ்­வாறு ஒரு நுழை­வுத் தேர்­வினை செயல்­மு­றைக்கு கொண்டு வரு­வ­தால், பள்­ளிக்­கல்­வி­யோடு பயிற்சி மையங்­க­ளை­யும் நாடும் மாணவ சமு­தா­யத்­தி­னர் பெரும் மன உளைச்­ச­லுக்கு ஆளாவர் என்று தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அவர் தாக்­கல் செய்த தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டது.