திண்டுக்கலில் நள்ளிரவில் நில அதிர்வால் மக்கள் பீதி

திண்டுக்கலில் நள்ளிரவில் நில அதிர்வால் மக்கள் பீதி

1 mins read
07c1886d-1f2e-4d4f-ba4e-f584d42a40c9
-

திண்­டுக்­கல்: நள்­ளி­ர­வில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கம் கார­ண­மாக, திண்­டுக்­கல் மாவட்­டம் ஒட்­டன்­சத்­தி­ரத்­தில் பொது­மக்­கள் பீதி அடைந்­த­னர்.

இது நில நடுக்­கத்­தால் ஏற்­பட்ட அதிர்வா அல்­லது பாறை­க­ளுக்கு வைக்­கப்­பட்ட வெடி­கள் வெடித்­த­தால் ஏற்­பட்ட அதிர்வா என்­பது குறித்து விசா­ரணை நடக்­கிறது.

நேற்று முன்­தி­னம் ஒட்­டன்­சத்­தி­ரம் அருகே உள்ள கீர­னூர், கள்­ளி­மந்­த­யம் உள்­ளிட்ட பகு­தி­களில் நள்­ளி­ரவு வேளை­யில் நில அதிர்வு உண­ரப்­பட்­டது.

அப்­போது பல வீடு­க­ளின் மேற்­கூ­ரை­யில் இருந்து ஓடு­கள் விழுந்­த­தா­க­வும் வீட்­டுக்­குள் இருந்த பொருள்­கள் அசைந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மேலும் சில வீடு­களில் ஆங்­காங்கே விரி­சல் ஏற்­பட்­ட­தா­க­வும் அப்­ப­குதி மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து, பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளுக்­குள் செல்ல அஞ்சி, பல மணி­நே­ரம் வீதி­யி­லேயே காத்­துக்­கி­டந்­த­னர்.

இந்­நி­லை­யில், சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களில் பாறை­க­ளுக்கு வெடி வைக்­கப்­பட்­டதா என்­பது குறித்து விசா­ரணை நடத்த அப்­ப­குதி கோட்­டாட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார். நில அதிர்­வின்­போது பெரும் சத்­தம் கேட்­ட­தா­க­வும் பொது­மக்­கள் தெரி­வித்­த­னர். இதற்­கான கரா­ணம் குறித்­தும் ஆரா­யப்­பட்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், நில­ந­டுக்­கம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அதற்­கான அறி­கு­றி­கள் ஏதும் தென்­ப­ட­வில்லை என்­றும் அதி­கா­ரி­கள் தெரிவித்தனர்.