நூறு ஊழியர்களுக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கிய சென்னை நிறுவனம்

நூறு ஊழியர்களுக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கிய சென்னை நிறுவனம்

1 mins read
ad59bea0-90b3-4915-ac23-c1d212e2f984
நூறு ஊழியர்களுக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்ச்சியில் ஊழியர்கள் சிலருடன் அளவளாவும் ஐடியாஸ்2ஐடி நிறுவனரும் தலைவருமான முரளி விவேகானந்தன். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி காயத்திரி விவேகானந்தன் உடன் உள்ளார். படம்: தி இந்து பிஸ்னஸ் லைன் -

சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களில் ஏறக்குறைய 100 பேருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஐடியாஸ்2ஐடி எனும் அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெற்றிக்கு அளப்பரிய விதங்களில் பங்களித்ததற்காக அவர்களுக்கு மாருதி சுசுகி கார்களைப் பரிசாக வழங்கியுள்ளதாக அது கூறியது.

"எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ள ஊழியர்கள் 100 பேருக்கு 100 கார்களை நாங்கள் அன்பளிப்பாக வழங்குகிறோம். எங்கள் நிறுவனத்தில் 500 பேர் வேலை செய்கின்றனர். நாங்கள் சம்பாதித்த பணத்தை எங்களுடைய ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்வதே எங்களது நோக்கம்," என்று ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவுத் தலைவர் ஹரி சுப்பிரமணியன் கூறினார்.

நிறுவனத்தை மேம்படுத்துவதில் ஊழியர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறிய ஐடியாஸ்2ஐடி நிறுவனரும் தலைவருமான முரளி விவேகானந்தன், கார்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் கடுமையாக உழைத்துள்ளதைச் சுட்டினார்.