சமூக ஊடகத்தில் காதல் வலை; பல பெண்களிடம் பணம் பறிப்பு

சமூக ஊடகத்தில் காதல் வலை; பல பெண்களிடம் பணம் பறிப்பு

2 mins read
e95d825b-94c8-4251-9613-749215e340d3
-

திரு­வண்­ணா­மலை: சமூக ஊட­கத்­தில் 100க்கும் மேற்­பட்ட பெண்­க­ளி­டம் ஆசை வார்த்தை கூறி பல லட்­சக்­க­ணக்­கில் பணம் பறித்த ஆட­வ­ரி­டம் ஆரணி காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இதற்­காக, ஆர­ணியை அடுத்த பையூர் கிரா­மத்­தைச் சேர்ந்த 23 வயது பாலாஜி என்­ப­வ­ரின் புகைப்­ப­டத்­தைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளார் ஆர­ணி­யைச் சேர்ந்த 24 வயது பயாஸ்.

சமூக ஊட­கத்­தில் பாலா­ஜி­யின் நண்­பர் அத­னைப் பார்த்­து­விட்டு அவ­ரி­டம் தெரி­வித்­துள்­ளார். அதைத்­தொ­டர்ந்து தமது படத்­தைப் பயன்­ப­டுத்­தும் உண்­மை­யான நபர் யார் என அவர்­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

பின்­னர் இளம்­பெண் போல் பயா­சுக்கு குறுஞ்­செய்தி அனுப்பி குறிப்­பிட்ட இடத்­திற்கு அவரை வர­வ­ழைத்­த­னர்.

பயாசை நேருக்கு நேர் சந்­தித்த பாலாஜி, "எனது புகைப்­ப­டத்­தைப் பயன்­ப­டுத்தி நீ பல பெண்­க­ளி­டம் ஏமாற்றி பணம் பறித்து வரு­வ­தால், எனக்கு பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­கிறது. எனவே, உட­ன­டி­யாக படத்தை அகற்­றி­விடு," எனக் கூறி­யுள்­ளார்.

அப்­போது பாலா­ஜியை பயாஸ் கையால் தாக்கி கொலை செய்­து­வி­டு­வேன் என மிரட்­டல் விடுத்து

உள்­ளார்.

இது­தொ­டர்­பாக, ஆரணி டவுன் காவல்­நி­லை­யத்­தில் பாலாஜி கொடுத்த புகா­ரின் பேரில், பயாசை கைது செய்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர்.

அப்­போது தமி­ழ­கம், ஆந்­திரா, கர்­நா­டகா என்று பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த இளம் பெண்­கள் இவ­ரி­டம் ஏமாந்­துள்­ளது தெரி­ய­வந்­தது.

சில பெண்­க­ளி­டம் ஆபா­ச­மாக பேசும் குரல் பதி­வைக் கொண்டு மிரட்டி பணம் பறித்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து பயாஸ் மீது

4 பிரி­வுகளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்த காவல்­து­றை­யி­னர், அவரை ஆரணி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி போளுர் கிளை சிறை­யில் அடைத்­த­னர்.