ஒரு வரி செய்திகள்

ஒரு வரி செய்திகள்

1 mins read
423270f1-580e-479f-b545-2372573c661e
-

 இரு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளதாக அதன் தலைமை மருத்துவர் தேரனிராஜன் அறிவித்துள்ளார்.

 திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி 'கட்ட' ராஜாவுக்கு கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

 எந்த வகை கொரோனா தொற்று பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

 நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்­ற­வற்­றில் மாண­வர் நலன் கருதி அர­சுக்­குத் துணை நிற்­போம் என்று கூறி­யுள்ா­ளர் அதி­முக கட்சி உறுப்­பி­ன­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான கே.எஸ்.செங்­கோட்­டை­யன்.

 எரிசக்தி, பருவநிலை குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும் தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன.

 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.