சசிகலா: அதிமுக உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளது

சசிகலா: அதிமுக உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளது

2 mins read
4418bfab-e9ad-428e-8b29-3604d70ed106
-

சென்னை: அதி­முக உடன்­பி­றப்­பு­களில் பெரும்­பா­லா­னோ­ரின் ஆத­ரவு தனக்கு உள்­ளது என்று கூறு­கி­றார் சசி­கலா.

அவரை அதி­மு­க­வின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்­கி­யது செல்­லும் என்று சென்னை நீதி­மன்­றம் அளித்த தீர்ப்பு குறித்து அவர் இத­னைக் கூறி­னார்.

சசி­க­லாவை பொதுச்­செ­ய­லா­ளர் பத­வி­யில் இருந்­தும் கட்­சி­யில் இருந்­தும் நீக்­கும் தீர்­மா­னம், 2017ஆம் ஆண்டு செப்­டம்­பர் 12ஆம் தேதி நடந்த அதி­முக பொதுக்­குழு கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த முடிவை இந்­திய தேர்­தல் ஆணை­ய­மும் ஏற்­றுக்­கொண்­டது.

ஆனால், அதனை எதிர்த்து சென்னை சிவில் நீதி­மன்­றத்­தில் சசி­கலா வழக்கு தொடர்ந்­தார். இந்த வழக்­கில் கட்­சி­யில் இருந்து சசி­க­லாவை நீக்­கி­யது செல்­லும் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

"நான் அர­சி­ய­லில் இருப்­ப­தும் இல்­லா­மல் போவ­தும் கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் எடுக்­கக்­கூ­டிய முடிவு. தனி­ந­ப­ராக யாரும் என்­னி­டம் அதை சொல்ல முடி­யாது.

"மேலும் தமி­ழக மக்­களும் தொண்­டர்­களும் விரும்­பு­ப­வர்­களை அர­சி­ய­லில் இருந்து விரட்ட முடி­யாது.

"அத்­து­டன், அதி­மு­க­வின் உடன்­பி­றப்­பு­களில் பெரும்­பா­லா­னோ­ரின் ஆத­ரவு எனக்கு உள்­ளது. மக்­கள் என் மீது வைத்­துள்ள நம்­பிக்கை நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும். நாடா­ளு­மன்றத் தேர்­த­லுக்­குள் மாற்­றம் வரும்," என்­றார் சசி­கலா.

சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்

இதற்­கி­டையே, சசி­கலா பற்றி கட்­சி­யி­னர் யாரும் விமர்­சிக்க வேண்­டாம் என அதி­முக ஆலோ­சனை கூட்­டத்­தில் பேசிய ஓபி­எஸ், இபி­எஸ் கூறி­யுள்­ள­னர்.

"சசிகலாவுக்கும் கட்­சிக்­கும் இனி எந்த தொடர்­பும் இல்லை என்று ஆகி­விட்­டது.

"எனவே, கட்சியினர் யாரும் இனி அவரைப் பற்றி, பொது­வெளி­யில் பேசவோ, விமர்­சிக்­கவோ வேண்­டாம்.

"அவ்­வாறு பேசி­னால், அதனை அவர் சாத­க­மாக எடுத்துக்கொள்ளக் கூடும். மேலும், அவ­ரின் கருத்து­களுக்கும் யாரும் பதி­ல­ளிக்க வேண்­டாம்," என்று அவர்கள் கூறினார்கள்.