படிக்கட்டாக பயன்படுத்தப்படும் சோழர் கால கல்வெட்டுகள்

படிக்கட்டாக பயன்படுத்தப்படும் சோழர் கால கல்வெட்டுகள்

1 mins read
e9b922d8-ed37-4b18-aea6-dc4de3547482
உத்திரமேரூர் சிவாலயம் ஒன்றில் படிக்கட்டாக பயன்படுத்தப்படும் கல்வெட்டு. படம்: இணையம் -

காஞ்­சி­பு­ரம்: ஆல­யம் ஒன்­றில் படிக்­கட்­டாகப் பயன்­ப­டுத்­தப்­படும் கல்­வெட்­டைப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று உத்­தி­ர­மே­ரூர் வர­லாற்று ஆய்வு மையம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த உத்­தி­ர­மே­ரூர் வர­லாற்று ஆய்வு மையத் தலை­வர் கொற்­றவை ஆதன், "உத்­தி­ர­மே­ரூர் அருகே உள்ள மலை­யான்­கு­ளம் கிரா­மத்­தில் 12, 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த இரு கல்­வெட்டு களைக் கண்­ட­றிந்­தோம். இவை முத­லாம் குலோத்­துங்க சோழர்­கள் காலத்­தைச் சார்ந்­த­தா­கும்.

'சுங்­கம் தவிர்த்த சோழன்' என்று வர­லாற்­றில் அறி­யப்­படும் முத­லாம் குலோத்­துங்க சோழன் ஆட்­சி­யின் கீழ் உத்­தி­ர­மே­ரூர் சிறிது காலம் இருந்­துள்­ளது.

"இவ­ரது 47வது ஆண்டு ஆட்­சியை இந்­தக் கல்­வெட்டு செய்தி குறிக்­கிறது.

"இந்த கல்­வெட்­டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சிறு­கூற்ற நல்­லூர், தற்­போது சிறு­ம­யி­லூர் என வழங்­கப்­படும் ஊராக இருக்க வாய்ப்­புள்­ளது. இது­கு­றித்து மேலும் ஆய்வு செய்ய உள்­ளோம்.

"இந்­தக் கல்­வெட்டு முக்­கி­யத்­து­வம் வாய்ந்த கல்­வெட்டு. இது தற்­போது சிவா­ல­யத்­தில் படிக்­கட்­டா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. எனவே இதைப் பாது­காக்க வேண்­டும்," என்­றார்.