பரோட்டா, பிரியாணி எதுவாக இருந்தாலும் முதல் ஆள்

பரோட்டா, பிரியாணி எதுவாக இருந்தாலும் முதல் ஆள்

1 mins read
f31451fc-a494-4798-b01c-f698a5f0818f
13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்ட வினு. படம்: இணையம் -

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் பூலன் கோடு பத்­ர­காளி அம்­மன் கோவில் கும்­பா­பி­ஷேக விழா நடை­பெற்­றது.

இந்த விழா­வில் வித்­தி­யா­ச­மான முறை­யில் 2 கிலோ காய்­கறி பிரி­யா­ணியை முத­லில் சாப்­பிட்டு முடிப்­ப­வர்­க­ளுக்கு 2,000 ரூபாய் பரிசு என அறி­விக்­கப்­பட்­டது. இதில் 14 ஆண்­களும் ஒரு பெண்­ணும் கலந்து கொண்­ட­னர்.

விறு­வி­றுப்­பாக நடந்த இப்­போட்­டி­யில் 13 நிமி­டத்­தில் இரண்டு கிலோ வெஜி­ட­பிள் பிரி­யா­ணியை சாப்­பிட்ட வினு என்­கின்ற இளை­ஞர் முதல் பரி­சைத் தட்­டிச் சென்­றார்.

முதல் பரிசை தட்­டிச் சென்ற வினு, ஏற்­கெ­னவே பரோட்டா சாப்­பி­டும் போட்­டி­யில் பங்­கேற்று 43 பரோட்­டாக்­களை சாப்­பிட்டு பரிசை தட்­டிச் சென்­ற­தாக பெரு­மை­யு­டன் கூறி­னார்.