சென்னை: கார் பரிசளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது சென்னையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் Ideas2IT என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய 100 ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் மாருதி காரை பரிசாக அளித்துள்ளது அந்நிறுவனம்.
இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகானந்தன், "இது நிறுவனம் கொடுக்கும் கார் அல்ல. தங்கள் கடின உழைப்பின் மூலம் ஊழியர்கள் சம்பாதித்தது.
"வரும் நாள்களில் இதுபோன்ற மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
தங்க நாணயம், ஐபோன், கார் போன்ற பரிசுகள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஊழியர்கள் கூறினர். ஓரிரு நாள்களுக்கு முன்னர் மென்பொருள் நிறுவனம் ஒன்று தனது மூத்த அதிகாரிகள் ஐவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புமிக்க பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

