அரசுப் பணித் தேர்வுமுறையில் மாற்றம்

அரசுப் பணித் தேர்வுமுறையில் மாற்றம்

1 mins read
57b87bc7-75db-4502-9865-5b4daa8393ec
-

சென்னை: சட்­டப் பேர­வை­யில் பேசிய மனி­த­வள மேம்­பாட்டு அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ராஜன், தமிழ்­நாட்­டில் மூன்று லட்­சத்­துக்­கும் மேல் அர­சுப் பணி­யி­டங்­கள் காலி­யாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இத­னைச் சரி செய்­யும் வகை­யில் டி.என்.பி.எஸ்.சி எனப்­படும் தமி­ழக அர­சுப் பணி­க­ளுக்­கான தேர்வு ஆணை­யம், தேர்­வு­களை எவ்­வாறு நடத்­து­வது, தேர்­வுக்கு எத்­த­கைய பயிற்­சி­களை வழங்­கு­வது, தேர்வு முறை­யில் உள்ள குள­று­ப­டி­களை எவ்­வாறு சரி­செய்­வது உள்­ளிட்­டவை தொடர்­பாக ஆய்­வு­செய்ய, தமி­ழக அரசு தனி நிபு­ணர் குழுவை அமைத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

மேலும், இந்த நிபு­ணர் குழு தற்­போது ஆய்வு மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும், ஆறு மாத காலத்­திற்­குள் இக்­குழு அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அந்த அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அர­சுத் தேர்வு முறை மற்­றும் அரசு வேலை­வாய்ப்­பில் சீர்­திருத்­தம் கொண்டு வரப்­பட்டு, அர­சுத் துறை­யில் உள்ள காலிப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­படும்" என்­றும் அமைச்­சர் விளக்­க­ம­ளித்­தார்.

"அர­சுப் பணி­களில், சில இடங்­களில் கூடு­தல் ஊழி­யர்­கள், சில இடங்­களில் யாருமே இல்­லாத நிலை இருப்­ப­தால், தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என எல்­லா­வற்­றை­யும் மறு­ஆய்வு செய்ய, சிறப்­புக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­தார்.