பொள்ளாச்சி: பொள்ளாச்சிக்கும் கோயம்புத்தூருக்கும் இடையிலான சாலையில் தனியார் மண்டபம் ஒன்றின் எதிரில் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் ஆட்டோ அருகே சென்று பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் காணப்பட்டன.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆட்டோவைச் சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்து அந்த வட்டாரக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அருகில் இருந்த ஒரு வீட்டிலிருந்து இந்த மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் காலாவதியான மாத்திரை, ஊட்ட மருந்து போன்றவை அதில் இருந்தது கண்டறியப்பட்டது.

