அம்பேத்கர் பிறந்தநாளில் சமத்துவ நாள் கொண்டாட்டம்

அம்பேத்கர் பிறந்தநாளில் சமத்துவ நாள் கொண்டாட்டம்

1 mins read
772217d0-85ac-4b8a-a716-3208eb7c7c72
-

சென்னை: தமி­ழ­கத்­தில் இனி அம்­பேத்­கர் பிறந்த நாளான ஏப்­ரல் 14, சமத்­துவ நாளா­கக் கொண்­டா­டப்­படும் என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

அம்­பேத்­கர் வேண்­டா­ததை நீக்­கிய சிற்பி என்­ப­து­டன் வேண்­டி­ய­தைச் சேர்த்த ஓவி­யர் என்று முதல்­வர் ஸ்டா­லின் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

அம்­பேத்­கர் மணி­மண்­ட­பத்­தில் அவ­ருக்கு முழு உருவ வெண்­க­லச் சிலை நிறு­வப்­படும் என்­றும் அவ­ரது பிறந்­த­நா­ளில் சமத்­துவ உறு­தி­மொழி எடுக்­கப்­படும் என்­றும் திரு ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

சுதந்­திர இந்­தி­யா­வின் முதல் சட்ட அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றிய டாக்­டர் அம்­பேத்­கர், தீண்­டா­மைக்கு எதி­ரான போராட்­டத்­தில் முக்­கி­யப் பங்கு வகித்­த­வர்.