பாஜக-விசிக இடையே கடும் மோதல்

பாஜக-விசிக இடையே கடும் மோதல்

1 mins read
cf9fff93-4d01-497b-9456-3fd9e5591310
-

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் சென்னையில் பதற்றம் நிலவியது.

நேற்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கோயம்பேடு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனும் மாலை அணிவித்தனர்.

முன்னதாக இரு கட்சியினரும் திரளாகக் கூடியிருந்தனர். அப்போது திருமாவளவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திடீரென இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் புட்டிகள், நாற்காலிகள் என எல்லாம் தூக்கி வீசப்பட்டன.

அதையடுத்து இரு கட்சியினரும் கடுமையாக மோதிக்கொள்ள திருமாவளவன் அங்கிருந்து வேகமாகச் சென்றார். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் ஆனது.