14 மாதக் குழந்தையின் சாதனை

14 மாதக் குழந்தையின் சாதனை

1 mins read
c966b9c6-91ca-47db-9918-8c3b10798ab1
-

பிறந்து 16 மாதங்களே ஆன சக்தி கந்தராஜ் என்ற குழந்தையின் பெயர் 'கலாம் உலக சாதனையாளர்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. தமது அபார நினைவாற்றலைக் கொண்டு பழங்கள், காய்கறிகள், விலங்குகள் என 500க்கும் மேற்பட்ட பெயர்களை கற்றல் உதவி அட்டைகளின் உதவியோடு சுட்டிக்காட்டுகிறது குழந்தை சக்தி கந்தராஜ். இதையடுத்து குழந்தை சக்தியைப் பாராட்டி, 'கலாம் உலக சாதனைப் புத்தகம்' சார்பில் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைக் குழந்தையின் பெற்றோர் கோவை இடையார் பாளையத்தைச் சேர்ந்த கீர்த்திகுமரன், சுகன்யா தம்பதியர் ஆவர். படம்: தமிழக தகவல் ஊடகம்