ரூ.12 கோடி மதிப்புள்ள மூன்று சாமி சிலைகள் மீட்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் இருந்து நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­குக் கடத்­திச் செல்­லப்­பட்ட ஏரா­ள­மான சாமி சிலை­கள் கைப்­பற்­றப்­பட்டு வருகின்­றன. வெளி­நா­டு­களில் உள்ள சிலை­க­ளும்­கூட மீட்­கப்­படு­கின்­றன.

இந்­நி­லை­யில், தமி­கத்­தில் இருந்து புது­வைக்­குக் கடத்­திச் செல்­லப்­பட்ட மூன்று பழ­மை­யான சாமி சிலை­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக சிலைக்கடத்­தல் தடுப்­புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் புது­வை­யில் உள்ள ஒரு வீட்­டில் பழ­மை­யான ஐம்­பொன் சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கிடைத்த ரக­சி­யத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்­துறை­யி­னர், அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது அங்கு நட­ராஜர், வீணா­தாரா சிவன், விஷ்ணு சிலை­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது.

அவற்­றின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வீட்­டில் ஜோசப் கொலம்­பானி என்­ப­வர் வசித்து வந்­த­தா­க­வும் அவர் இறந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­ய­ வந்­துள்­ளது. அக்­கு­றிப்­பிட்ட வீட்­டில் அவ­ரது பேரப் பிள்­ளை­கள் வசித்து வரு­கின்­ற­னர்.

அந்­தச் சிலை­களை அவர் நீண்­ட ­கா­ல­மாக பாது­காத்து வந்­த­தா­க­வும் அதைத் தவிர வேறு எந்தத் தக­வ­லும் தெரி­யாது என்­றும் அவர்­கள் கூறி­னர்.

கைப்­பற்­றப்­பட்ட மூன்று சிலை­களை­யும் முன்பு ஃபிரான்ஸ் நாட்டுக்கு கடத்­திச் செல்ல முயற்சி நடந்­தது தெரி­ய வந்­துள்­ளது. அவை சுமார் 600 ஆண்­டு­கள் பழமை வாய்ந்­தவை எனக் கரு­தப்­ப­டு­கிறது. கடந்த 1980ஆம் ஆண்டு தமி­ழ­கத்­தில் உள்ள ஏதே­னும் ஒரு கோவி­லில் இருந்து இச்­சிலை­கள் திருடியிருக்க வாய்ப்­புள்­ள­தாக டிஜிபி ஜெயந்த் முரளி தெரி­வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!