உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களோடு இருக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் அறிவுரை

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களோடு இருக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் அறிவுரை

2 mins read
f8fca0e0-7656-4c9a-8ab1-db807ba38a70
-

சென்னை: உள்­ளாட்சிப் பிர­திநிதிகள் முறை­யா­கச் செயல்­பட்­டால் மக்­க­ளாட்­சி­யின் தத்­து­வம் மகத்­தான வளர்ச்சி பெறும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

தமி­ழக நக­ராட்சி நிர்­வா­கம், குடி­நீர் வழங்­கல் துறை சார்­பில் மாந­க­ராட்சி மேயர்­கள், துணை மேயர்­கள், நக­ராட்சி, பேரூ­ராட்­சி­க­ளின் தலை­வர்­கள், துணைத்­த­லை­வர்­களுக்­கான நிர்­வாக பயிற்சி முகாம் சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்­வர், உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் மக்­க­ளோடு இருக்க வேண்­டும் மக்­க­ளுக்­காக இருக்க வேண்­டும் எனக் குறிப்­பிட்­டார்.

உள்­ளாட்­சி­யின் எதிர்­கா­லம் அதன் பிர­தி­நி­தி­க­ளின் கையில்­தான் அடங்­கி­யுள்­ளது என்­றும் மேயர், துணை மேயர் உட்­பட அனை­வ­ரும் தங்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருப்­ப­தைப் பத­வி­யாக நினைக்­கா­மல் பொறுப்­பாக நினைக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் கேட்­டுக்கொண்­டார்.

"1996ஆம் ஆண்டு சென்னை மேய­ராக, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் மேய­ராக நான் பத­வி­யேற்­றேன். நிகழ்ச்­சி­களில் கலந்துகொள்­வதே அதற்கு முன்பு மேயர்­க­ளின் நட­வ­டிக்­கை­யாக இருந்­தது. அதை நான் மாற்­றி­னேன்.

"மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்­தால்­தான் பெருமை என்ற நிலை­யில், அந்த பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு பணி­யாற்­றி­னேன்," என்­றார் முதல்வர் ஸ்டா­லின்.

உள்­ளாட்சி அமைப்­பு­களின் நிர்­வா­க­மும் மாமன்­றத்­தின் நட­வடிக்­கை­களும் சிறந்து விளங்­கிட மாந­க­ராட்­சி­யின் சட்­டங்­க­ளை­யும் விதி­மு­றை­க­ளை­யும் மேயர்­கள் அறிந்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

மாநில அர­சின் நிதி நிலைமைக்கு ஏற்­றபடி உள்­ளாட்சி அமைப்­பு­களுக்கு நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யும் என்று குறிப்­பிட்ட முதல்­வர், அவ்­வாறு ஒதுக்­கீடு செய்­யப்­படும் நிதியை முறை­யாக செலவு செய்­திட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"மக்­க­ளுக்குத் தேவை­யான அடிப்­படை வச­தி­களைச் செய்து கொடுத்­தல், சுற்­றுப்­புறச் சூழல் தூய்­மையைப் பேண­வும், நகர்ப்­புற கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­த­வும், நேர்மை­யான நிர்­வா­கம் அமைந்திட மாந­க­ராட்சி சட்ட விதி­க­ளுக்கு உட்­பட்டு நல்­ல­மு­றை­யில் செயல்­ப­டுத்தி தமி­ழக அர­சுக்கு நல்ல பெயரை பெற்றுத் தர வேண்­டும்," என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.