சென்னை: சென்னை ஆவடியில் வசிக்கும் நரிக்குறவர் இன பள்ளி மாணவிகள் வீட்டிற்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
அந்த வருகையின்போது 101 நரிக்குறவர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை முதல்வர் வழங்கினார்.
வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் மாணவிகள் வீட்டிற்குச் சென்றதாகவும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் செய்தியாளர்களிடம் முதல்வர் குறிப்பிட்டார்.

