சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதுப் பெருமை

சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதுப் பெருமை

1 mins read
5109674d-1465-48bc-9ee1-39882593b854
-

சென்னை: உலகின் ஆகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை வணிக இதழான சிஇஓவேர்ல்டு வெளியிட்டுள்ளது.

அதில் மொத்தம் நூறு கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி 60ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தையும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த மேலும் நான்கு மருத்துவக் கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி 22ஆம் இடத்திலும் புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரி 37ஆவது இடத்திலும் உள்ளன.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 46, புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 56ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அங்கீகாரத்தால் அக்கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.