ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதல்வர் விளக்கம்

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதல்வர் விளக்கம்

1 mins read
aa508c1e-2b35-431b-80a1-ecd2a879501e
-

சென்னை: தமிழ்ப் ­புத்­தாண்டை ஒட்டி ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற தேநீர் விருந்தை தமி­ழக அரசு புறக்­க­ணித்­தது. முதல்­வர், அமைச்­சர்­கள், அரசு அதி­கா­ரி­கள், திமுக கூட்­டணிக் கட்சி பிரதி­நிதிகள் உள்பட யாரும் இதில் கலந்துகொள்­ள­வில்லை.

ஆளு­ந­ரின் தேநீர் விருந்தை தமி­ழக அரசு புறக்­க­ணித்­தது அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தது.

இந்­நி­லை­யில், இது­கு­றித்து சட்­ட­ச­பை­யில் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் விளக்­கம் அளித்துள்ளார்.

"ஒட்­டு­மொத்த தமி­ழர்­க­ளின் உணர்வை வெளிப்­ப­டுத்­தும் நீட் விலக்கு மசோதா 210 நாட்­க­ளாக ஆளு­நர் மாளி­கை­யில் கவ­னிப் பாரின்றி முடங்­கிக்­கி­டக்­கின்­றது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்­கும்­போது, தேநீர் விருந்­தில் எப்­படி பங்­கேற்க முடி­யும்? நீட் விலக்கு மசோ­தாவை முடக்­கு­வது மக்­களை அவ­ம­திப்­ப­தா­கும்.

"தமிழக மக்களுக்கு நல்லது நடக்கிறது என்­றால் நான் வலி­யை­யும் அவ­மா­னத்­தை­யும் தாங்­கிக்­கொள்­வேன்.

"ஆளுநர் மீது எனக்கு தனிப்­பட்ட விரோ­தம் இல்லை. தனிப்­பட்ட முறை­யில் அவருக்கும் எனக்­கும் இடையே சுமூக உறவு இருக்­கிறது. ஆளுநருக்கு உண்­டான மரி­யா­தையைத் தொடர்ந்து வழங்­கு­வோம்," என்று கூறி­யுள்ளார்.