'பதக்கத்துடன்தான் வருவேன்' என்றவர் உடல் சென்னை வந்தது

'பதக்கத்துடன்தான் வருவேன்' என்றவர் உடல் சென்னை வந்தது

2 mins read
96d5cf2f-c51c-4b50-b3ab-57ad3e073a8a
விஸ்வா தீனதயாளன். ஊடகம் -

ஷில்­லாங்: மேகா­லயா தலை­ந­கர் ஷில்­லாங்­கில் நேர்ந்த கார் விபத்­தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் மேசைப்­பந்து வீரர் விஸ்வா தீன­தயா­ளன், 18, உயி­ரி­ழந்­தார். அவ­ரது உடல் விமா­னம் மூலம் நேற்று சென்­னைக்கு கொண்டு வரப்­பட்டு அண்ணா நக­ரில் உள்ள அவ­ரது வீட்­டிற்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டது.

விஸ்வாவின் மறை­வுக்கு பிரதமர் மோடி, ஆளு­நர் ஆர்.என்.ரவி, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உள்ளிட்டோர் இரங்­கல் தெரி­வித்­துள்­ளனர்.

"பதக்­கத்­தோடு வரு­வ­தா­கக் கூறி­விட்டு உற்­சா­க­மா­கப் போனார். உல­க­ள­வில் 100 இடங்­க­ளுக்­குள் வரு­வதே அவ­ரது கன­வாக இருந்­தது. இப்­படி நடக்­கும் என நாங்­கள் கன­வி­லும் நினைக்கவில்லை," என வேதனை தெரிவித்துள்ளனர் அவ­ரது பயிற்­சி­யா­ளர்­கள்.

விஸ்வாவின் தந்தை தீன தயாளன் சென்னையில் வர்த்தகம் செய்து வருகிறார். நுங்­கம்­பாக்­கத்­தில் உள்ள லயோலா கல்­லூ­ரி­யில் பி.காம் முத­லாமாண்டு படித்து வந்த விஸ்­வா­வுக்கு சிறு வய­தில் இருந்தே மேைசப் பந்து விளை­யாட்டின் மீது தீராத ஆசை.

நேற்று நடை­பெற இருந்த 83வது தேசிய அள­வி­லான போட்­டி­யில் கலந்­து­கொள்­வ­தற்­காக விஸ்வா தீன­த­யா­ளன் அசாம் மாநி­லம், கவு­காத்­தி­யில் இருந்து நேற்று முன்தினம் டாக்­சி­யில் ஷில்­லாங் வந்து கொண்­டி­ருந்­தார். அவ­ரு­டன் சக வீரர்­கள் ரமேஷ் சந்­தோஷ் குமார், அபி­னாஷ் பிர­சன்­னாஜி ஸ்ரீநி­வா­சன், கிஷோர் குமார் ஆகிய மூவ­ரும் உட­னி­ருந்­த­னர்.

இவர்­க­ளது டாக்சி, சங்­பங்லா என்ற இடமருகே வந்த­போது, எதிரே வந்த 12 சக்­கர சரக்கு லாரி ஒன்று ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து டாக்சி மீது பயங் ­க­ர­மாக மோதி­யதில் டாக்சி ஓட்டு­ ந­ரும் விஸ்வாவும் உயி­ரி­ழந்­தனர்.

பலத்த காய­ம­டைந்த வீரர்கள் மூவ­ரும் ஷில்­லாங் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெறுகின்­ற­னர்.

விஸ்வாவின் மறை­வுக்கு இந்­திய மேைசப்பந்து கூட்­ட­மைப்பு தலை­வர் துஷ்­யந்த் சவு­தாலா இரங்­கல் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன், அவ­ரது குடும்­பத்­திற்கு ரூ.5 லட்­சம் வழங்­கப்­படும் என்­றும் கூறியுள்­ளார். ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.