அனைத்துலக நீச்சல் போட்டி: நடிகர் மாதவன் மகன் சாதனை

அனைத்துலக நீச்சல் போட்டி: நடிகர் மாதவன் மகன் சாதனை

1 mins read
8efc6717-07dd-4003-943b-e15f39b8d363
-

கோபன்­ஹே­கன்: டென்­மார்க்­கில் நடை­பெற்ற டேனிஷ் ஓபன் அனைத்­து­லக நீச்­சல் போட்­டி­யில் நடி­கர் மாத­வ­னின் மகன் வேதாந்த் (படம்) கலந்து­கொண்டு தங்­கம் வென்று சாதனை படைத்­துள்­ளார்.

வேதாந்த், கடந்த இரு நாள்­களுக்கு முன்­னர்­தான் டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் நடை­பெற்ற 1,500 மீட்­டர் பிரி­வுக்­கான நீச்­சல் போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கம் வென்­றி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அவர் மீண்­டும் தற்­போது 800 மீட்­டர் பிரி­வில் பங்­கேற்று தங்­கப்­ப­தக்­கத்தை வென்­றுள்­ளார். எதிர்வரும் 2026ல் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தயா­ராகி வரும் வேதாந்த்துக்கு பல தரப்­பி­ன­ரிடம் இருந்தும் வாழ்த் துகள் குவிந்து வரு­கின்­றன.

இது­கு­றித்து நடி­கர் மாத­வன் தனது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில், "உங்­க­ளு­டைய ஆசீர்­வா­தத்­தால் தொடர்ந்து வெற்­றி­கள் கிடைத்து வரு­கின்­றன. இப்­போது 800 மீட்­டர் பிரி­வில் தங்­கம் கிடைத்­துள்­ளது. இச்சாதனை மகிழ்ச்சி அளிப்­பது மட்­டு­மின்றி நாடே பெருமை கொள்­வ­தா­க­வும் இளை­ஞர்­க­ளுக்கு உத்­வே­கம் அளிக்­கக்கூடிய வகை­யிலும் உள்ளது. இதற்­காகப் பயிற்­சி­யா­ளர் பிர­தீப்­புக்­கும் உறு­து­ணை­யாக இருந்த அனை­வ­ருக்­கும் நன்றி கூறிக்கொள்­கிறேன்," என்று பதிவிட்டுள்­ளார்.