விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா கூவாகத்தில் நடந்த போட்டியில் மிஸ் திருநங்கையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா உற்சாகத்துடன் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டாண்டுகளாக தடைபட்டிருந்த திருவிழா இவ்வாண்டு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது.
விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
அவர்களை மகிழ்விக்கும் விதமாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை ெபற்றன.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ரவிக்குமார், நடிகர் சூரி, நடிகை நளினி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர். திருநங்கைகளுக்கான நடனம், பராம்பரிய கிராமிய இசைப் போட்டிகளும் நடைபெற்றன.
மிஸ் திருநங்கைக்கான அழகிப் போட்டியில் விழிப்புணர்வுக் கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்த சென்னையைச் சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த மதுமிதா இரண்டாம் இடத்தையும் எல்சா மூன்றாவது இடத்ைதயும் பிடித்தனர்.
"சாலைகளில் கையேந்தி நிற்கும் திருநங்கைகளே இல்லாத அளவில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என அமைச்சர் பொன்முடி ெதரிவித்தார்.
திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றுத்தர திமுக முயற்சி செய்யும் என்றும் அவர் கூறினார்.

