பாரதியார்-செல்லம்மாளின் ரத யாத்திரை தொடங்கியது

பாரதியார்-செல்லம்மாளின் ரத யாத்திரை தொடங்கியது

1 mins read
b5cd63e2-3af0-43c8-8401-e135fe7e5b5a
சென்­னை­யி­லி­ருந்து மனைவியை அரவணைத்தபடி ரத யாத்­தி­ரை தொடங்கியுள்ள பாரதியார்-செல்­லம்­மாள் சிலை. படம்: ஊடகம் -

திரு­வள்­ளூர்: சென்­னை­யி­லி­ருந்து ரத யாத்­தி­ரை­யாக பயணம் புறப்பட்டுள்ள பார­தி­யார்-செல்­லம்­மாள் சிலை ஜூன் 27ஆம் தேதி கடை­யத்தில் நிறு­வப்­ப­ட­வுள்­ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்­காசி மாவட்­டம், கடை­யம் பகுதியை நோக்­கிச் செல்­லும் இந்த ரத யாத்­தி­ரையை மகா­கவி பாரதி-செல்­லம்­மா­வின் கொள்ளுப் பேத்தி உமா­பா­ரதி துவக்கிவைத்­தார்.

செல்­லம்­மா­வின் தோளில் கைவைத்­த­ப­டி­ உள்ள பார­தி­யின் ஏழடி உயரச் சிலை தயா­ராகி, நான்கு ஆண்­டு­க­ளாக கடை­யம் செல்வதற்காக காத்­தி­ருந்­த நிலை யில், இப்போதுதான் அதற்கான பயண நேரம் கனிந்துள்ளதாக இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி சுரேந்­தி­ர­நாத் கூறியுள்ளார்.

தேசி­யக் கவி­ஞர் பார­தி­யாரின் துணை­யு­டன் ஏறக்குறைய ஒன்றரை மாதகாலம் மாநிலம் முழு­வ­தும் இந்த ரதம் தரி­ச­னம் தந்துவிட்டுத்தான் பிறந்த ஊரான கடை­யத்துக்கு வரவுள்ளது. செல்­லம்­மாளை வர­வேற்­க கடை­யம் பகுதி மக்­கள் ஆவலுடன் தயா­ராகி வரு­கி­ன்றனர்.