செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
14313041-e69f-473c-bec2-0bbb3118fe38
-

டிடிவி தினகரன் வரும் 21ஆம் தேதி முன்னிலையாக அழைப்பாணை

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசி, ரூ.2 கோடியை முன்பணமாக தந்ததாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட இவ்வழக்கு தொடர்பில், இரண்டாம் கட்ட விசாரணைக்கு வரும் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையாகும்படி டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

வனவிலங்குகளுக்காக தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்

திருப்போரூர்: செங்கல்பட்டு, திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கோடை வெப்பத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வனவிலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, மான் இனங்கள், கழுதைப் புலி, நரி, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், செல்வகுமார் என்ற இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரயில்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள இரண்டு கிலோ பசை வடிவிலான தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தங்கத்தைக் கடத்தி வந்த விமான ஊழியர் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். விசாரணை தொடர்கிறது.