தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு வெகுமதி, பாராட்டு 11 மாதங்களில் 141 சாமி சிலைகள் மீட்பு

தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு வெகுமதி, பாராட்டு 11 மாதங்களில் 141 சாமி சிலைகள் மீட்பு

2 mins read
5571c3de-8a1e-448a-a6d8-9ba38b364631
தமி­ழக சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவல்­து­றை­யி­னரால் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள். கோப்புப் படம் -

சென்னை: கடந்த 11 மாத கால கட்­டத்­தில் மட்­டும் 141 சிலை­களும் கலைப்­பொ­ருள்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவல்­து­றை­யி­னர் தெரி­வித்து உள்­ள­னர்.

கடந்த ஆண்டு மே மாதத்­தில் இருந்து இப்­போது வரை சிலைக் கடத்­தல் சம்­ப­வங்­கள் தொடர்­பாக 33 வழக்­கு­கள் பதி­யப்­பட்டு, 44 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

திருக்­கு­வளை தியா­க­ராஜ சுவாமி கோயி­லுக்­குச் சொந்­த­மான ரூ.500 கோடி மதிப்­புள்ள மர­க­த­லிங்­கம் சிலை, நான்­கடி உயர ரூ.5 கோடி மதிப்­புள்ள சம்­ஹார மூர்த்தி சிலை, ராவ­ணன் உலோ­கச் சிலை, நான்­கடி உய­ர­முள்ள சிவன் சிலை உள்­ளிட்ட மீட்­கப்­பட்ட சிலை­க­ளின் பட்­டி­ய­லை­யும் காவல்­து­றை­யி­னர் அறிக்­கை­யாக வெளி­யிட்­டுள்­ள­னர்.

கடந்த 2020 மே மாதம் முதல் 2021 ஏப்­ரல் மாதம் வரை 80 சிலை­கள் மீட்­கப்­பட்டு, ஒன்­பது பேர் கைது­ செய்­யப்­பட்­ட­தா­க­வும் 2021 மே மாதம் முதல் இப்­போது வரை 141 சிலை­கள் மீட்­கப்­பட்டு, 44 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இது இதற்கு முந்­தைய ஆண்­டைக்­காட்­டி­லும் அதி­கம் என­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, மயி­லாப்­பூ­ரில் உள்ள காவல்­துறை தலைமை இயக்­குநா் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், சிலை­க­ளைக் கண்டு­பி­டிக்­கும் பணி­யில் சிறப்­பா­கச் செயல்­பட்ட சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரி­வின் மூன்று தனிப்­ப­டை­யி­ன­ருக்கு தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சி. சைலேந்திரபாபுவும் தமி­ழக சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முர­ளி­யும் வெகு­ம­தி­யு­டன் சான்­றி­த­ழும் வழங்கிப் பாராட்டி கௌர­வித்­துள்­ள­னர்.