முதுமக்கள் தாழியைப் பாதுகாக்க அரசுக்கு மாணவி கோரிக்கை

முதுமக்கள் தாழியைப் பாதுகாக்க அரசுக்கு மாணவி கோரிக்கை

1 mins read
2ec07540-7c90-414b-ab84-283f72dbeb4b
இறந்த முன்னோர்களின் வாழ்க்கை வர­லாற்றை நாம் தெரிந்துகொள்­ளும் வித­மாக முது­மக்­கள் தாழி இருக்­கிறது என்று கூறியுள்ள கவிபாரதி, தான் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி பக்கத்தில் நிற்கிறார். படம்: தமிழக ஊடகம் -

கம்­பம்: தேனி மாவட்­டத்­தில் உற­வி­னர் ஒரு­வ­ரது தோட்­டத்­தில் முது­மக்­கள் தாழி உள்­ளதை கவி­பா­ரதி என்ற மாணவி கண்­டு­பிடித்து, இது­கு­றித்து தமி­ழக அர­சுக்­குத் தெரி­வித்து, அதனைப் பாது­காப்பதற்கு ஏற்­பாடு செய்­யும்­படி கோரி­க்ைக விடுத்துள்ளார்.

தேனி மாவட்­டம், காக்­கில் சிக்­கை­யன்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பாண்­டிக்­கு­மார். இவ­ரது மகள் கவி­பா­ரதி, தஞ்­சா­வூர் அரசு தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தொல்­லி­யல் பிரி­வில் படித்து வரு­கி­றார்.

தமிழ்ப் புத்­தாண்­டின்­போது குள்­ளப்ப கவுண்­டன்­பட்­டி­யில் உள்ள தனது உற­வி­னர் வீட்டுத் தோட்­டத்­திற்­குச் சென்­றுள்­ளார். அங்கு தோட்ட வேலைக்­காக தோண்­டப்­பட்டிருந்­த பள்ளத்தில் முது­மக்­கள் தாழி­யினை அடை­யா­ளப்­ப­டுத்­தும் வித­மாக மண்­ணால் ஆன பெருங்­கு­ளுக்கை இருப்­பதைப் பார்த்­தார்.

அதனை மேலும் தோண்­டி­ய­தில் முன்­னோர்­கள் இறப்­பின்­போது பயன்­ப­டுத்­தும் முது­மக்­கள் தாழி­யில் உள்ள சின்­னஞ்­சிறு ஈமச்­சடங்கு செய்த மண் பாண்­டங்­கள் இருப்­பது தெரி­ய­வர இதுகுறித்து கல்லூரிக்குத் ெதரிவித்தார்.