கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

1 mins read
c57bf577-da7a-4ad5-b0d2-5765ac45c7d4
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. படம்: ஊடகம் -

சென்னை: நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள ஜெய­ல­லி­தா­வின் கோட­நாடு எஸ்­டேட்­டில் கடந்த 24-4-2017ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்­தது. இதில், கோட­நாடு எஸ்­டேட்­டின் காவ­லாளி ஓம்­ப­க­தூர் கொல்­லப்­பட்­டார்.

இது தொடர்­பாக சயான், வாளை­யாறு மனோஜ், சந்­தோஷ் சாமி, தீபு, சதீ­சன், உத­ய­கு­மார், ஜிஜின் ராய், ஜம்­சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகி­யோர் கைது­செய்­யப்­பட்­ட­னர். இவ்­வ­ழக்­கில் தொடர்­பு­டைய ஓட்­டு­நர் கன­க­ராஜ் சாலை விபத்­தில் உயி­ரி­ழந்­தார்.

தமி­ழ­கத்­தில் ஆட்சி மாற்­றத்­துக்கு பின்­னர், கோட­நாடு சம்­பவ வழக்கு விசா­ரணை ஐந்­தாண்­டு­களுக்­குப் பிறகு மீண்­டும் தீவி­ர­ம் அடைந்­துள்­ளது.

மேற்கு மண்­டல காவல்­துறை ஐஜி சுதா­கர், கோவை சரக டிஐஜி முத்­து­சாமி ஆகி­யோ­ரது நேரடி மேற்­பார்­வை­யில் தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்டு இந்த வழக்­கில் மீண்­டும் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது. இந்த வழக்­கில் இது­வரை 200க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில், கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பாக வி.கே. சசிகலா இன்று காலை முன்­னி­லை­யாக வேண்­டும் என நீல­கிரி காவல்­துறை ஆணை அனுப்­பி­யுள்­ளது. இன்று காலை 10 மணிக்கு சசி­க­லா­வி­டம் தனிப்­படை காவல்­து­றை­யி­னர் சென்­னைக்கு வந்து விசா­ரணை நடத்த உள்­ள­னர். கோட­நாட்­டில் இருந்த சொத்­துக்­கள் மற்­றும் காணா­மல் போன பொருட்­கள் குறித்­தும் சசி­க­லா­விடம் விசா­ரணை நடத்­தப்­பட உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.