தொற்றை விரட்டியடித்த கோவை மருத்துவமனை

தொற்றை விரட்டியடித்த கோவை மருத்துவமனை

1 mins read
643e286c-a234-4f57-8bf8-488d762ab1b1
-

கோயம்­புத்­தூர்: தமி­ழக அள­வில் சென்­னை­யைக் காட்­டி­லும் கோவை­யில் அதி­க­ள­வி­லான நோயா­ளி­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­னர். சில வாரங்­கள் நோயா­ளி­கள் அதி­கம் உள்ள மாவட்­ட­மாக தமி­ழ­கத்­தி­லேயே முதல் இடத்­தி­லும் கோவை மாவட்­டம் நீடித்­தது.

தொற்று உச்­சத்­தில் இருந்­த­போது ஒரே நாளில் அதி­க­பட்­ச­மாக 47 பேர் வரை உயி­ரி­ழந்­த­னர். இத­னால் கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்றி வந்த மருத்­து­வர்­கள், தாதி­யர், பணி­யா­ளர்­கள் ஆகி­யோர் எந்த நேர­மும் பர­ப­ரப்­பு­டன் ஓய்­வின்றி உழைத்­து­வந்­த­னர். இருப்­பி­னும் சிறப்­பான சிகிச்­சையை கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு அளித்து வந்­த­னர். தடுப்­பூசி மற்­றும் நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டன.

கொரோனா வார்­டில் கடந்த ஒரு வார­மாக 10க்கும் கீழ் நோயா­ளி­கள் அனு­ம­திக்­கப்­பட்டு வந்­த­னர். இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் கொரோனா வார்டு நோயா­ளி­கள் அனை­வ­ரும் குண­மடைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.