சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்டு அதிகாரிகள் விசாரணை

சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்டு அதிகாரிகள் விசாரணை

2 mins read
f28423a9-efb6-4057-bdf2-bd1ecbc98869
-

சென்னை: சசி­க­லா­வி­டம் நடத்­தப்­படும் விசா­ர­ணை­யைத் தொடர்ந்து கோட­நாடு கொலை-கொள்ளை வழக்கு மீண்­டும் சூடு­பி­டித்­துள்­ளது.

இவ்­வ­ழக்கு தொடர்­பாக சசி­கலா­வி­டம் தனிப்­படை காவல்­து­றை­யி­னர் 500 கேள்­வி­க­ளைக் கேட்டு விசா­ரணை நடத்­தி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இந்த விசா­ர­ணையை அடுத்து தியா­க­ராய நக­ரின் அபி­புல்லா சாலை­யில் பலத்த காவல்­துறை பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது.

சென்னை தியா­க­ராய நக­ரில் உள்ள சசி­கலா வீட்­டில் தென்­மண்­டல ஐஜி தலை­மை­யில் எட்டு காவல் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். அப்போது சசி­க­லா­வின் வழக்­க­றி­ஞர் ராஜா செந்­தூர்­பாண்­டி­ய­னும் உட­னி­ருந்­தார்.

"ஜெய­ல­லிதா வாழ்ந்த இடத்­தில் கொலை, கொள்­ளைச் சம்­ப­வம் நடந்­தது துர­தி­ருஷ்டவச­மா­னது. இவ்­வ­ழக்­கில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­டனை கிடைக்க காவல்­து­றை­யி­ன­ருக்கு துணை நின்று சாட்­சி­களை அளிப்­பேன்," என்று சசி­கலா உறுதி கூறி­யதாகவும் தகவல்.

கோட­நாட்­டில் விலை உயர்ந்த ஆப­ர­ணங்­கள், ஆவ­ணங்­கள் இருந்­ததா? இப்­போது அவை யார் பொறுப்­பில் உள்­ளது? அங்­கி­ருக்­கும் பணி­யா­ளர்­களை நிய­மித்­தது? குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

தேவைப்­பட்­டால் அதி­கா­ரி­க­ளு­டன் நேரில் சென்று கோட­நாட்­டில் இருக்­கும் பொருள்­கள் குறித்­தும் தக­வல் தெரி­விக்க சசி­கலா தயா­ராக இருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்­பர் 5ஆம் தேதி மர­ணம் அடைந்­தார்.

இதைத்­தொ­டர்ந்து அவ­ரது கோட­நாடு பங்­களா ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­க­லா­வின் கட்­டுப்­பாட்­டில் இருந்து வந்­தது.

இந்­நி­லை­யில், 2017ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் இந்த பங்­க­ளா­வுக்­குள் புகுந்த மர்­ம­ந­பர்­கள் கொள்ளை சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது அவர்­க­ளைத் தடுக்க முயன்ற காவ­லாளி ஓம்­ப­க­தூர் படு­கொலை செய்­யப்­பட்­டார்.