சென்னை: ஆதரவின்றி தெருக்க ளில் சுற்றித் திரிபவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து பராமரித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியைச் சென்னை மாநகர காவல்துறையின் கீழ் இயங்கும் காவல்துறை அமைப்பு செய்து வருகிறது.
இதுபோல், சென்னையில் ஆதர வற்ற நிலையில் மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 62 பெண்கள் உள்பட 176 பேரை அவர்களது ெசாந்த ஊருக்கு அனுப்பும் கருணைப் பயணம் நிகழ்ச்சி நடந்தது. சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு நல உதவிகளை வழங்கினார்.

