சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிபர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட புகார்களைப் பட்டியலிட்டு திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின்படி நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

