கழிவுநீர் தொட்டியில் நச்சு வாயு தாக்கி மூவர் பலி

1 mins read
a9b9cbd1-d35f-403b-b3dc-6a4224b3bfe1
-

மதுரை: கழிவுநீர் தொட்டிக்குள் பழுதடைந்த மோட்டார் கருவியை சரிசெய்ய முயன்றபோது திடீரென நச்சு வாயு (நச்சுப்புகை) தாக்கி மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகினர்.

மூன்று பேரில் சிவ குமார் என்பவர் முதலில் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதைக்கண்டு அவருடன் வந்த லட்சுமணன் பதறிப்போனார். சிவகுமாரைக் காப்பாற்றும் வேகத்தில் அவரும் தொட்டிக்குள் குதிக்க, அவரைத் தொடர்ந்து சரவணனும் குதித்துள்ளார்.

எனினும், நச்சு வாயுவின் அளவு அதிகரித்ததால் மூவரும் தொட்டியில் இருந்து மேலே வர முயற்சி மேற்கொண்டபோது மயக்கம் அடைந்தனர்.

பின்னர் மூவரது உயிரும் பிரிந்தது. மூன்று பேரும் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.