தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு

2 mins read
8c8a282c-80d4-4340-8d77-890c76804d81
-

சென்னை: வட இந்­திய மாநிலங்­களில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதி­க­ரித்து வரும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு ஐநூறு ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என அரசு அறி­வித்­துள்­ளது.

டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம், ஹரி­யானா உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது தென்­னிந்­திய மாநி­லங்­களும் கொரோனா கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் அறி­வித்து வரு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் வெகு­வா­கக் கட்­டுக்­குள் உள்ள போதி­லும், மாநில அரசு பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. அதன்­படி முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, எதிர்­வ­ரும் மே 8ஆம் தேதி தமி­ழ­கம் முழு­வ­தும் சுமார் நூறா­யி­ரம் இடங்­களில் கொரோனா சிறப்பு தடுப்­பூசி முகாம் நடை­பெ­றும் என மக்­கள் நல்­வாழ்வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள ஐஐடி கல்வி மையத்­தில் திடீ­ரென முப்­பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. வட மாநி­லங்­களில் இருந்து வந்த பணி­யா­ளர்­கள் மூலம் ஐஐ­டி­யில் தொற்று பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து நெடுஞ்­சாலை, கட்டு­மா­னப் பணி­க­ளுக்­காக வட மாநி­லங்­களில் தமி­ழ­கத்­துக்கு அழைத்து வரப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக அரு­கில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட வேண்­டும் என தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்ளது. இதற்­கி­டையே, மாநி­லத்­தில் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளா­த­வர்­கள் எண்­ணிக்கை 20 மில்­லி­யனை நெருங்கி உள்­ள­தா­க­வும் சுமார் 13 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் வரும் செப்­டம்­பர் மாதம் காலா­வ­தி­யா­கி­வி­டும் என்­றும் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில், தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்க மருத்­துவ கல்வி இயக்­கு­நர் நாரா­யண பாபு உத்­த­ர­விட்­டுள்­ளார்.