கோடநாடு கொலை சம்பவம்: நீதி கிடைக்க சசிகலா வலியுறுத்து

கோடநாடு கொலை சம்பவம்: நீதி கிடைக்க சசிகலா வலியுறுத்து

2 mins read
f8f8e547-dd1f-4c03-9c2a-b6387c726f2f
-

சசிகலா: கோடநாடு பங்களாவை கோவிலாகத்தான் பார்த்தோம்

சென்னை: கோட­நாடு குற்­றச் சம்­ப­வம் தொடர்­பான காவல்­து­றை­யின் விசா­ர­ணைக்­குத் தாம் முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தாக சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

அந்­தக் குற்­றச்­சம்­ப­வத்­தில் தொடர்­பு­டை­ய­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்­குச் சொந்­த­மான கோட­நாடு எஸ்­டேட் பங்­க­ளா­வில் பணி­யில் இருந்த காவ­லாளி கொலை செய்­யப்­பட்­டார். மேலும், அங்­கி­ருந்த சில பொருள்­களும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன.

இது­தொ­டர்­பாக காவல்­துறை தீவிர விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், அந்­தக் கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பாக காவல்­து­றை­யி­னர் சசி­க­லா­வி­ட­மும் விசா­ரணை நடத்­தி­னர்.

இதை­ய­டுத்து, அந்த விசா­ரணை தொடர்­பில் அதி­கா­ரி­கள் கேட்ட அனைத்து கேள்­வி­க­ளுக்­கும் தாம் பதில் அளித்­த­தா­க­வும் விசா­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தா­க­வும் சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

கோட­நாடு என்­பது மற்­ற­வர்­களுக்கு வேண்­டு­மா­னால் சாதா­ரண இட­மாக இருக்­க­லாம் என்­றும் தம்மைப் பொறுத்­த­வரை அது ஜெய­ல­லிதா மிக­வும் நேசித்த இடம் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஜெய­ல­லி­தா­வுக்கு நிறைய மன அமை­தி­யை­யும் மகிழ்ச்­சி­யை­யும் கொடுத்த ஓர் இடம் உண்டு என்­றால் அது கோட­நா­டு­தான். எங்­களைப் பொறுத்­த­வரை கோட­நாடு பங்­க­ளாவை கோவி­லா­கத்­தான் பார்த்­தோம்.

"இது­போன்ற முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அந்த இடத்­தில் விரும்­பத்­த­காத சம்­ப­வம் நடை­பெற்­ற­போது நான் சிறை­யில் இருந்­தேன். இந்த சம்­ப­வத்­தில் எங்­க­ளி­டம் நெடுங்­கா­ல­மாக பணி­யாற்­றிய காவ­லாளி ஓம்­ப­க­தூர் கொலை செய்­யப்­பட்டு கொள்­ளை­யும் நடந்­துள்­ளது," என்று சசி­கலா அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.

கோட­நாடு கொலைச் சம்­ப­வத்தை அடுத்து சந்­தே­கத்­துக்­கு­உரிய வகை­யில் தொடர்ச்­சி­யாக சில மர­ணங்­கள் நடை­பெற்­றுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், எந்த பாவ­மும் அறி­யாத சின்ன குழந்­தை­யும் அவ­ரது தாயும்­கூட பலி­யா­கி­விட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"எனவே, இந்த வழக்­கில் காவல்­துறை உரிய விசா­ரணை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­கள் கண்­டிப்­பாக தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்­பதே எனது வேண்­டு­கோள். இந்த சம்­ப­வத்­தில் இன்­னு­யிரை இழந்த ஒன்­றுமே அறி­யாத அப்­பா­வி­க­ளான காவ­லாளி, பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை, அவ­ரது தாயார் ஆகி­யோர் மர­ணத்­துக்கு உரிய நீதி கிடைத்­திட வேண்­டும்," என்று சசி­கலா மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.